Saturday 4 May 2013

தங்கமீன்கள்

கேட்டதில் பிடித்தது: தங்கமீன்கள் பாடல்கள் !



'கற்றது தமிழ்' ராமின் இரண்டாவது படம். அவர் நடிக்கும் முதல் படம்!

இதை படிக்கும் முன்பு தங்கமீன்கள் ட்ரைலரை ஒரு முன் பார்த்துவிடுங்கள் .

படத்தில் மொத்தம் 4 பாடல்கள் . ஒவ்வொரு பாடலும் ராமின் 'voice over' உடன் தொடங்குகிறது. அது அந்த பாடலின் tempo , situation முதலியவற்றை அழகாக பிரதிபலிக்கிறது.

1. ஆனந்தயாழை மீட்டுகிறாய் : 'மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம், காமத்தில் சேர்ந்ததில்லையென்று' என ராமின் 'voice over' உடன் தொடங்கும் இப்பாடல் தான் படத்தின் சச்சின் பீஸ்! முதல் முறை கேட்க்கும்போதே பிடித்துவிட Sriram Parthasarthy ன் குரலும் காரணம்.  "ப்பா ! ஒவ்வொரு முறை இப்பாடலை கேட்க்கும்போதும் புல்லரித்து போய்விடுகிறேன்". அழகான ட்யுனுக்கு அதை விட அழகாய் வரிகள் எழுதியிருக்கிறார் ந.முத்துக்குமார். "சிறு புல்லின் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை" என்ற வரியின் பிரம்மிப்பில் இருந்து இன்னும் என்னால் வெளிவரமுடியவில்லை! பனியின் வழியாய் மலையை பார்த்தால் எப்படி இருக்கும்? யோசித்துப்பாருங்கள்! என்ன ஒரு கற்பனை ! எங்கேயோ போயிட்டீங்க தல!



2.  நதி வெள்ளம்: "அப்பாக்களைப் பிரியா மகள்கள் அதிர்ஷ்டசாலிகள்; மகள்களைப் பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள் ; ஆனால் அப்படி ஒன்றும் தந்துவிட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை"எனத் தொடங்கும் இப்பாடல் ஒரு slow song. மகளைப் பிரிந்த அப்பா பாடும் பாடல். நடுநடுவே வரும் 'flute'ம் , முடியும்போது வரும் "guitar"ம், ராகுல் நம்பியாரின் குரலில் "கண்ணீர்த்துளிகள் காட்சியை மறைக்குதடி" "மலர்கள் விழுந்தால கைகளில் ஏந்த பலர் ஓடுவோம், இலைகள் வீழ்ந்தால் சருகாகும்; வறியவனின் வாழ்க்கை இலை போல என்றாலும், சருகாகும்" என்ற வரிகளும் நெஞ்சை வருடுகின்றன.


3. யாருக்கும் தோழன்:"முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக்கூடாது என்ற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வால (!) ஆசைப்படுகிறார்கள் " என்று படத்தின் oneline ஐ சொல்கிறார் ராம். " கேட்டதெலாம் தந்துவிட வாழ்க்கை ஒன்று தோழன் இல்லை" என்று வாழ்க்கையின் நிதர்சநத்தை சொல்கிறது இப்பாடல். "சொன்ன தேதி சொன்ன நேரம் உன்னை வந்து சேருவேன், இல்லை என்று ஆகும்போது என்னை நானே கொல்லுவேன்" என்ற முத்துக்குமார் வரிகளில் படத்தின் knot வெளிப்படுகிறது! Singer selection and background perfect! Well done Yuvan..


4. first last: "அப்பாக்களும் பிள்ளைகளும் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும் ஒரே இடம் பள்ளிக்கூடம் தான்" - best of all voiceover. Super Ram!!! இன்றைய பள்ளிக்குழந்தைகளின் நிலையை அந்த குழந்தைகளே சொல்லும் பாடல். இந்த  பாட்டில் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் முத்துக்குமார்.
"Butterfly ஐ கயித்துல கட்டி freedom பத்தி பாடம் நடத்த யாரு கண்டுபுடிச்சா ?"
"தமிழில பேசும் பசங்கள தலையில கொட்டி fine போட யாரு கண்டுபுடிச்சா?"
"பாட்டி கதையும் கேக்கல , ப்ரெண்டு கூடவும் பேசல"
"கேம்ஸ் ஆடவும் time இல்ல, கார்ட்டூன் பாக்கவும் டைம் இல்ல" என நிறைய ...

Muthukumar at his best and Yuvan does the rest!

Final word: A must listen album for all who likes "Good" music and lyrics..

தங்கமீன்கள் - "தூண்டிலில் மாட்டும் மீனல்ல இது! ஒரு முறை கேட்டால் உங்கள் பிடித்துக்கொள்ளும் தூண்டில் :) "

Monday 7 January 2013

உன் கூந்தலில் ... - க(வி)தை


"இதுவரைக்கும் எனக்காக ஒரு கவிதையாவது எழுதிருக்கியா? போடா பேசாத!"  என்று அவள் கோவித்துகொல்லாத நாட்களே இல்லை.

"கவிதைக்கே யாராவது கவித சொல்வாங்களா?"  என்று ஐஸ் வைக்கும் போதெல்லாம்
"முடிலனா சொல்லிடு!" என்பாள் பொய்க் கோவத்தோடு.

"ஹே ஹே! முடியாதா? யாருகிட்ட? உன் 'முடி'ய வெச்சே எழுதரறேன் பாரு!" என்று சவால் விட்டு இரு மாதங்களாயிற்று.

                         இன்றைக்கு அவள்  பிறந்தநாள். இன்றாவது எழுதிக்    காட்டி அசத்திவிட வேண்டியதுதான்!

                          அவளை நினைத்து கண்ணை மூடித் தொடங்கினேன்...

உன் தலையில் இருப்பது
140,000+ கருப்பு வானவில்கள்....!

உன் கருங்கூந்தல் காட்டில்
தொலைந்து தவிக்கும்போது
உன் புன்னகை ஒளியில் தடம் பிடித்து வெளிவருகிறேன் ..!

உதட்டின் மீது விழும் முடியை,
ஊதி புறந்தள்ளி ஒழுங்காய் ஆக்குகிறாய்;
இதைபார்த்தபின் இதுவரை ஒழுங்காய்
இருந்த நானோ  கலைந்து போகிறேன்...!

சூரியன் நிலவுக்கு  வெளிச்சம் தருவதுபோல்,
இரவுக்கு கருப்பு தருவது உன் கூந்தல்...!

சர் சிவி.ராமன் உன் கூந்தலைப் பார்த்திருந்தால்,
இரவிற்க்கான scattering effectஐ கண்டுபிடித்து
இன்னொரு நோபல் வாங்கியிருப்பார்...!  

நீ தலையில் பூ சூடாத நாள் தான்,
வானில் அமாவாசையை பிரதிபலிக்கிறது..!

நட்சத்திரங்கள்,
உன் கூந்தல் க்ளிப்பாய் 
மாற ஏங்கும்;
நிலவோ
தவம் செய்து
உன் தலையணையாய் மாறி தூங்கும்..!

உன் கூந்தலில் தொலைந்து
நெற்றியில் வெளிவரும் நேரமே
எனது விடியலாகும்..!

உன் ஈரக்கூந்தலை,
என் மார்பபுச்சூட்டில் காய வைப்பேன்...!
வழுக்கிவிடும் கூந்தலில் முகம்
சறுக்கி விளையாடுவேன்..!

உன் நீளக்கூந்தல் கொண்டு .... என்று எழுதும்போது செல்போன் SMS வந்திருப்பதாய் சொல்லியது. அவளாய்த் தான் இருக்கும் இருந்தும்,  சட்டை செய்யாமல் எழுத்தைத் தொடர்ந்தேன்.

உன் நீளக்கூந்தல் ஆட,
என் தோளில் ஊஞ்சல் செய்வேன்;

உன் நீளக் கூந்தல் கொண்டு,
கற்றைத் கதிரவனை
ஒற்றைக் கையில் மறைப்பேன்..!

         மனசு நிறைந்தது.   "ம்ம்ம் .. இந்தக் கவித அவளத்  தவிர யாருக்கும் சரி வராது! படிச்சதும் சந்தோஷமாகி என்னப் பண்ணப்போறாலோ:)))"

மொபைலை எடுத்தேன். அவளேதான்!! அவளை சரியாய் புரிந்து வைத்திருப்பதாய் ஒரு கர்வம். பிரித்துப்படித்தேன்.

"Hey Honey! Yu knw wat? I ve done haircut and colored my hair:)) My friends ar tellin dat am lukin lik 'Mozhi' Jyothika. I've sent yu pics in d mail. Check and tel.. See yu soon:)) mwaaha:*" 

Sunday 30 December 2012

Its a girl thing! - சிறுகதை

"டாமினி எங்க?"

"கட்டிலுக்கு கீழ பாரு!" குனிந்து பார்த்து என்னை அப்படியே தூக்கிக்கொண்டான்.


ம்ம்ம் மறுபடியும் மாட்டிக்கொண்டேன். இந்த முறை  என்ன செய்யப்போகிறான் எனத் தெரியவில்லை. தினந்தினம் யாராவது கூட்டி வருவான் இவன்.அவனோ 'தமிழ்நாட்டுக்காரன் கரண்ட்டைப் பார்ப்பது போல' பார்த்துக்கொண்டே,"மச்சி! She is very beautiful டா.. உனக்கு மட்டும் எப்படிடா இப்படிலாம் கெடக்குது.?."
" அங்கிள் பாம்பே போனப்ப.."
"hey.. your uncle is really great da" என்பான்.
இது தொடர்கதையாகிவிட்டது.  என்னை இங்கு கூட்டிவந்தது அவனுடைய மாமாதான். பெரிய தொழிலதிபர் என்று நினைக்கிறேன். 
"ok da . you start.. நா வெளில இருக்கேன்.. யாராவது வந்தா சொல்றேன்.."
அவ்வளவுதான்.. சரியாக 30 நிமிடம் கழித்து நீங்கள் என்னை தலைவிரிகோலமாய் எதாவதொரு மூலையில் பார்க்கலாம்.
இந்த இடத்திற்கு வந்த நாளிலிருந்து இப்படித்தான். தினம் சித்ரவதைதான். இந்த வீட்டில் இப்படி என்னைப் போல் பல பேர் இருக்கிறார்கள். "மங்கையராய் பிறப்பதற்கு மா தவம் செய்திருக்கவேண்டும்!".. no never... "மங்கையராய் பிறப்பதற்கு மா தவறு செய்திருக்கவேண்டும்!" yes.. இது தான் கரெக்ட்.. இந்த வீட்டில் என்னை புரிந்துகொண்ட ஒரே ஆள் இவனுடைய அம்மா தான். இவன் சிலசமயம் காட்டுமிராண்டித்தனமாய் நடந்துக்கொள்ளும்போது என்னைக் காப்பாற்றுவாள்  ஆனால் ஆண்களே ஆதிக்கம் செய்யும் இந்த இடத்தில் ஒரு பெண்ணால் மட்டும் என்ன செய்திடமுடியும்? பெண்களை வெளியே செல்லாதே என்று சொல்லத்தான் இருக்கிறார்கள் ஆட்கள். பெண்களிடம்  ஒழுங்காக நடந்துகொள், அவர்களும் மனிதர்கள் தான்  என்று சொல்ல யாருமில்லை; ஒரு பெண்   கற்பழிக்கப்பட்டால், அந்த ஆணின் உணர்ச்சியைத் தூண்டும் அளவுக்கு அந்த பெண் ஏன் உடை அணிகிறாள் ; ஒன்பது மணிக்கு மேல் அவள் ஏன் வெளியே செல்கிறாள் என்று கேட்க்கும் பெற்றோர்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள் .  
இவர்களிடத்தில் எப்படி புரியவைக்கமுடியும்.

"இப்போ என்னை எங்கே கூட்டிப்போகிறான்.. தெரியவில்லையே.."

"படார்ர்ர்ர்ர் ...." கதவை சாத்தினான்.

"அய்யய்யோ இப்ப என்ன  bathroom க்கு தூக்கிட்டுவந்திருக்கான்.. அப்போ என்ன குளிக்க வெச்சி எங்கயோ வெளில கூட்டிட்டுப்போகப்போறான்..ச்ச்.. அவ்வளவுதான்..."
என்னை அப்படியே தரையில் படுக்க வைத்து என் உடைகளை கழட்டினான்.. அப்படியே என்னைத்தூக்கி பாத்டப்-ல் போட்டு மூனு தடவை அமுக்கினான்..
"டேய்ய்ய் விட்றா..."  ம்ம்க்கும் இவ்வளயு நாளாய் கத்தும்போது கேட்க்காத குரல் இப்போது கேட்டுவிடுமா என்ன?? ச்சே குளிக்கும் போதுகூடத் தனியா  இருக்க முடியவில்லையே.. நா எப்படி இருந்தேன்  வீட்ல ..  இங்கே  இந்த மிருகங்களிடம் மாட்டிக்கொண்டு இப்படி சித்ரவதை அனுபவிக்கிறேனே.. " என்று நினைக்கும்போது என்னையும் அறியாமல் அழுகை வந்து பாத்டப் -ல் இருந்த தண்ணீரின் அளவை 1ml  ஏற்றியது.


பின்னர் துண்டால் துடைத்து,  வேறு ஒரு  உடையை எடுத்தான். திடிரென கதவு தட்டப்பட்டது. அப்படியே என்னை எடுத்து தனக்கு பின்னால் ஒளித்துவைத்துக்கொண்டான்.

"Hello my  Dear ராகுல்ல்ல்... இங்க பாரு uncle உனக்கு போன தடவ மாதிரியே புது Beautiful  பொம்மை வாங்கிட்டு வந்திருக்கேன்  ??" 


பின்னங்கையில் பிடித்திருந்த என்னை அப்படியே தூக்கிப்போட்டான். அதில் நேராய் சுவற்றில் மோதி ஒரு பொம்மை குவியலின் மேலே விழுந்தேன்.விழுந்த அதிர்ச்சியில் என் முதுகில் இருந்த விசை அழுந்த "i live in INDIA, i live in INDIA" என்ற பாடல் வந்தது, உடனே எனதருகில் இருந்த உடையில்லாத காலுடைக்கப்பட்டிருந்த பொம்மை "அப்போ உன் விதி இப்படிதான் முடியும்! " என்பது போல் என்னைப் பார்த்து சிரிக்கத்தொடங்கியது...!



Disclaimer: 1) The movie 'Toy story' was inspiration to this story. 2) This story was fully written through mobile 'Blogger' application. If you come across any spelling mistakes, pls inform:) Thanks!