குங்குமமிட்டு நீ கண் மூடி வேண்டும்போது கடவுளுக்கும் உன் மீது காதல் வரும்!
காற்றும் உனைச்சேர உள் வந்து,
கார்பன்-'டை'-ஆக்சைடாய் மோட்சம் பெறும்!
மாலையில்
வேளையில்
நீ பார்க்கையில்
சூரியன் உறைந்து நிலவாய் மாறும்!
மறுநாள் மதியம்,
உன் உடைகளை காய வைக்க வெயிலாய் வெளிவரும்!
உலகின் மொத்த இரும்பும்,
உன் வீட்டுக் கொடிக்கம்பியாய் மாற தவம் செய்து காத்திருக்கும்!
ஆனால் தவமோ நீ தவம் செய்ய தவமிருக்கும்!
நீ பார்த்தால்,
வெயிலுக்கும் வேர்த்துக்கொட்டும்; மழை உன்னுள் கரைந்துபோகும்!
பனியும் உறைந்து போகும்!
நீ தொட்டால்,
என் நிழலுக்கும் வண்ணம் வரும்;
எனைப் பிரிந்து உனைத் தொடர எண்ணம் வரும்!
உன்'நகை'யாய் மாற தங்கமும் ஏங்கும்!
புன்னகையைப் பார்த்ததும் சொர்க்கம் சேரும்!
உன் இதழ் பட்டால்,
வெற்றுக் கோப்பைக்கும் போதையேறும்!
வெற்றுக் காகிதமும்
காவியமாகும்!
உன்னுடைய புகைப்படத்திற்கும் மணம் இருக்கும்!
என் மனதில் எப்போதும் உனக்கொரு இடமிருக்கும்:)
(தொடரும்...)