Sunday, 30 December 2012

Its a girl thing! - சிறுகதை

"டாமினி எங்க?"

"கட்டிலுக்கு கீழ பாரு!" குனிந்து பார்த்து என்னை அப்படியே தூக்கிக்கொண்டான்.


ம்ம்ம் மறுபடியும் மாட்டிக்கொண்டேன். இந்த முறை  என்ன செய்யப்போகிறான் எனத் தெரியவில்லை. தினந்தினம் யாராவது கூட்டி வருவான் இவன்.அவனோ 'தமிழ்நாட்டுக்காரன் கரண்ட்டைப் பார்ப்பது போல' பார்த்துக்கொண்டே,"மச்சி! She is very beautiful டா.. உனக்கு மட்டும் எப்படிடா இப்படிலாம் கெடக்குது.?."
" அங்கிள் பாம்பே போனப்ப.."
"hey.. your uncle is really great da" என்பான்.
இது தொடர்கதையாகிவிட்டது.  என்னை இங்கு கூட்டிவந்தது அவனுடைய மாமாதான். பெரிய தொழிலதிபர் என்று நினைக்கிறேன். 
"ok da . you start.. நா வெளில இருக்கேன்.. யாராவது வந்தா சொல்றேன்.."
அவ்வளவுதான்.. சரியாக 30 நிமிடம் கழித்து நீங்கள் என்னை தலைவிரிகோலமாய் எதாவதொரு மூலையில் பார்க்கலாம்.
இந்த இடத்திற்கு வந்த நாளிலிருந்து இப்படித்தான். தினம் சித்ரவதைதான். இந்த வீட்டில் இப்படி என்னைப் போல் பல பேர் இருக்கிறார்கள். "மங்கையராய் பிறப்பதற்கு மா தவம் செய்திருக்கவேண்டும்!".. no never... "மங்கையராய் பிறப்பதற்கு மா தவறு செய்திருக்கவேண்டும்!" yes.. இது தான் கரெக்ட்.. இந்த வீட்டில் என்னை புரிந்துகொண்ட ஒரே ஆள் இவனுடைய அம்மா தான். இவன் சிலசமயம் காட்டுமிராண்டித்தனமாய் நடந்துக்கொள்ளும்போது என்னைக் காப்பாற்றுவாள்  ஆனால் ஆண்களே ஆதிக்கம் செய்யும் இந்த இடத்தில் ஒரு பெண்ணால் மட்டும் என்ன செய்திடமுடியும்? பெண்களை வெளியே செல்லாதே என்று சொல்லத்தான் இருக்கிறார்கள் ஆட்கள். பெண்களிடம்  ஒழுங்காக நடந்துகொள், அவர்களும் மனிதர்கள் தான்  என்று சொல்ல யாருமில்லை; ஒரு பெண்   கற்பழிக்கப்பட்டால், அந்த ஆணின் உணர்ச்சியைத் தூண்டும் அளவுக்கு அந்த பெண் ஏன் உடை அணிகிறாள் ; ஒன்பது மணிக்கு மேல் அவள் ஏன் வெளியே செல்கிறாள் என்று கேட்க்கும் பெற்றோர்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள் .  
இவர்களிடத்தில் எப்படி புரியவைக்கமுடியும்.

"இப்போ என்னை எங்கே கூட்டிப்போகிறான்.. தெரியவில்லையே.."

"படார்ர்ர்ர்ர் ...." கதவை சாத்தினான்.

"அய்யய்யோ இப்ப என்ன  bathroom க்கு தூக்கிட்டுவந்திருக்கான்.. அப்போ என்ன குளிக்க வெச்சி எங்கயோ வெளில கூட்டிட்டுப்போகப்போறான்..ச்ச்.. அவ்வளவுதான்..."
என்னை அப்படியே தரையில் படுக்க வைத்து என் உடைகளை கழட்டினான்.. அப்படியே என்னைத்தூக்கி பாத்டப்-ல் போட்டு மூனு தடவை அமுக்கினான்..
"டேய்ய்ய் விட்றா..."  ம்ம்க்கும் இவ்வளயு நாளாய் கத்தும்போது கேட்க்காத குரல் இப்போது கேட்டுவிடுமா என்ன?? ச்சே குளிக்கும் போதுகூடத் தனியா  இருக்க முடியவில்லையே.. நா எப்படி இருந்தேன்  வீட்ல ..  இங்கே  இந்த மிருகங்களிடம் மாட்டிக்கொண்டு இப்படி சித்ரவதை அனுபவிக்கிறேனே.. " என்று நினைக்கும்போது என்னையும் அறியாமல் அழுகை வந்து பாத்டப் -ல் இருந்த தண்ணீரின் அளவை 1ml  ஏற்றியது.


பின்னர் துண்டால் துடைத்து,  வேறு ஒரு  உடையை எடுத்தான். திடிரென கதவு தட்டப்பட்டது. அப்படியே என்னை எடுத்து தனக்கு பின்னால் ஒளித்துவைத்துக்கொண்டான்.

"Hello my  Dear ராகுல்ல்ல்... இங்க பாரு uncle உனக்கு போன தடவ மாதிரியே புது Beautiful  பொம்மை வாங்கிட்டு வந்திருக்கேன்  ??" 


பின்னங்கையில் பிடித்திருந்த என்னை அப்படியே தூக்கிப்போட்டான். அதில் நேராய் சுவற்றில் மோதி ஒரு பொம்மை குவியலின் மேலே விழுந்தேன்.விழுந்த அதிர்ச்சியில் என் முதுகில் இருந்த விசை அழுந்த "i live in INDIA, i live in INDIA" என்ற பாடல் வந்தது, உடனே எனதருகில் இருந்த உடையில்லாத காலுடைக்கப்பட்டிருந்த பொம்மை "அப்போ உன் விதி இப்படிதான் முடியும்! " என்பது போல் என்னைப் பார்த்து சிரிக்கத்தொடங்கியது...!



Disclaimer: 1) The movie 'Toy story' was inspiration to this story. 2) This story was fully written through mobile 'Blogger' application. If you come across any spelling mistakes, pls inform:) Thanks!