ஆர்ப்பு- சத்தம் இந்த இளந்தமிழனின் இரண்டாவது ஆர்ப்பு
கடந்த மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலின் முடிவுகள் நாளை அறிவிக்கப்படவுள்ளது. நாளைக்கு இந்நேரம் முடிவுகள் அறியப்பட்டு யார் ஆட்சி அமைக்கபோகிறார்கள் என்பது தெரியவந்திருக்கும். அனைவரும் எதிர்நோக்கி உள்ள தேர்தலின் முடிவு நம் தலைஎழுத்தை மாற்றப்போகும் முடிவு என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறானது.
தேர்தல் அறிக்கையில் நாங்கள் அதை தருகிறோம் நாங்கள் இதைத் தருகிறோம் என்று போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை அள்ளி வீசினார்கள். அதில் ஒருவர் கூட நாங்கள் நல்ல ஆட்சி தருவோம் என்று சொல்லவில்லையே? அவர்கள் நல்ல ஆட்சிக்கு தேர்தல் அறிக்கையில் கூட இடம் தரவில்லை. பிறகெப்படி இவர்கள் நமக்கு நல்லது செய்வார்கள் ?? தப்பித்தவறி எதாவது நல்ல திட்டங்கள் வந்தால் எதிர் கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுவிடும். 500கோடிக்கு ஊழல் செய்துவிட்டு கடந்த ஆட்சிக்காலத்தில் 501 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது, நாங்கள் அவர்களை விட கம்மியாய் தான் ஊழல் செய்தோம் என்று நியாயம் பேசுவார்கள் .
யார் வந்தால் என்ன?? நம் கஷ்டங்கள் தீரப்போவதில்லை. அடுத்த தேர்தல் முடிவின் போது கூட நான் இதே போன்று எழுதிக்கொண்டிருப்பேன். "திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பார்கள். ஒருவர் குடும்பத்தை வளர்ப்பார். இன்னொருவர் கொடநாட்டை வளர்ப்பார். இவர்கள் திருந்தப்போவதுமில்லை நமக்கு விடியப்போவதுமில்லை !!!
No comments:
Post a Comment
மனசுல தோணுறத எழுதுறேன்! எதாச்சும் தப்பிருந்தா என்னைய உங்க வீட்டு புள்ளயா நெனச்சு மன்னிச்சிருங்க!! ஹீ ஹீ ..!
Your comments are the secret energy for my post!