"இதுவரைக்கும் எனக்காக ஒரு கவிதையாவது எழுதிருக்கியா? போடா பேசாத!" என்று அவள் கோவித்துகொல்லாத நாட்களே இல்லை.
"கவிதைக்கே யாராவது கவித சொல்வாங்களா?" என்று ஐஸ் வைக்கும் போதெல்லாம்
"முடிலனா சொல்லிடு!" என்பாள் பொய்க் கோவத்தோடு.
"ஹே ஹே! முடியாதா? யாருகிட்ட? உன் 'முடி'ய வெச்சே எழுதரறேன் பாரு!" என்று சவால் விட்டு இரு மாதங்களாயிற்று.
இன்றைக்கு அவள் பிறந்தநாள். இன்றாவது எழுதிக் காட்டி அசத்திவிட வேண்டியதுதான்!
அவளை நினைத்து கண்ணை மூடித் தொடங்கினேன்...
உன் தலையில் இருப்பது
140,000+ கருப்பு வானவில்கள்....!
உன் கருங்கூந்தல் காட்டில்
தொலைந்து தவிக்கும்போது
உன் புன்னகை ஒளியில் தடம் பிடித்து வெளிவருகிறேன் ..!
உதட்டின் மீது விழும் முடியை,
ஊதி புறந்தள்ளி ஒழுங்காய் ஆக்குகிறாய்;
இதைபார்த்தபின் இதுவரை ஒழுங்காய்
இருந்த நானோ கலைந்து போகிறேன்...!
சூரியன் நிலவுக்கு வெளிச்சம் தருவதுபோல்,
இரவுக்கு கருப்பு தருவது உன் கூந்தல்...!
சர் சிவி.ராமன் உன் கூந்தலைப் பார்த்திருந்தால்,
இரவிற்க்கான scattering effectஐ கண்டுபிடித்து
இன்னொரு நோபல் வாங்கியிருப்பார்...!
நீ தலையில் பூ சூடாத நாள் தான்,
வானில் அமாவாசையை பிரதிபலிக்கிறது..!
நட்சத்திரங்கள்,
உன் கூந்தல் க்ளிப்பாய்
மாற ஏங்கும்;
நிலவோ
தவம் செய்து
உன் தலையணையாய் மாறி தூங்கும்..!
உன் கூந்தலில் தொலைந்து
நெற்றியில் வெளிவரும் நேரமே
எனது விடியலாகும்..!
உன் ஈரக்கூந்தலை,
என் மார்பபுச்சூட்டில் காய வைப்பேன்...!
வழுக்கிவிடும் கூந்தலில் முகம்
சறுக்கி விளையாடுவேன்..!
உன் நீளக்கூந்தல் கொண்டு .... என்று எழுதும்போது செல்போன் SMS வந்திருப்பதாய் சொல்லியது. அவளாய்த் தான் இருக்கும் இருந்தும், சட்டை செய்யாமல் எழுத்தைத் தொடர்ந்தேன்.
உன் நீளக்கூந்தல் ஆட,
என் தோளில் ஊஞ்சல் செய்வேன்;
உன் நீளக் கூந்தல் கொண்டு,
கற்றைத் கதிரவனை
ஒற்றைக் கையில் மறைப்பேன்..!
மனசு நிறைந்தது. "ம்ம்ம் .. இந்தக் கவித அவளத் தவிர யாருக்கும் சரி வராது! படிச்சதும் சந்தோஷமாகி என்னப் பண்ணப்போறாலோ:)))"
மொபைலை எடுத்தேன். அவளேதான்!! அவளை சரியாய் புரிந்து வைத்திருப்பதாய் ஒரு கர்வம். பிரித்துப்படித்தேன்.
"Hey Honey! Yu knw wat? I ve done haircut and colored my hair:)) My friends ar tellin dat am lukin lik 'Mozhi' Jyothika. I've sent yu pics in d mail. Check and tel.. See yu soon:)) mwaaha:*"
vadai poche
ReplyDelete:))
Delete;)
ReplyDelete