"டேய் வசந்த், இங்க வா"
"தோ வர்றேன் பாய்"
"இந்தா இந்த சாப்பாட்ட அந்த மாடி வீட்டு பசங்களுக்கு குடுத்துட்டு வா"
"இந்த டைம்லயா பாய், நா போமாட்டேன்"
"டேய் மணி 9.30 தான டா ஆகுது, போய் குடுத்துட்டு வா"
"நா தான் நைட்டு எங்கயும் போகமாட்டேன்னு தெரியும் ல அப்பறம் ஏன் என்ன போகசொல்றீங்க?"
"நீ என்ன பொம்பள புள்ளயாடா, அதுங்களே இந்த நேரத்துல தைரியமா சுத்துங்க, உனக்கென்ன டா"
"அதெல்லாம் எனக்குத் தெரியாது, நா போமாட்டேன் அவ்ளோதான்"
"சரி போறேன்! இதான் கடைசி! சரியா?" என்றபடியே சைக்கிளில் சாப்பாட்டு கூடையை மாட்டிக்கொண்டு கிளம்பினான் வசந்த்.
"டக் டக்"
"டக் டக் " இரண்டு முறை கதவை தட்டியதற்க்கு எந்தப் பதிலும் இல்லை.
"அண்ணே, நான் தான் பாய் கடைப்பையன். கதவ தொறங்...." சொல்லி முடிக்கும் முன் கதவு திறக்கப்பட்டது.
"வாடா தம்பி"
"இந்தாங்க அரவிந்தண்ணே சாப்பாடு, காசக்குடுத்திங்கன்ன கெளம்பிடுவேன்"
"ஏண்டா பறக்குற"
"இல்லன எனக்குதான் இருட்டுன்னா பயம்னு உங்களுக்கு தெரியுமே.. கரண்ட் கிரன்ட்போயிட போகுதுணா"
"தம்பரி, நீ பேப்பரெல்லாம் படிக்கமாட்டியா? இன்னிலேந்து ரெண்டு மணிநேரம் தான் கரென்ட் போகும். அது மதியானமே போயிடுச்சு.. நீ வா"
உள்ளே நுழைந்து சாப்பாட்டை பிரிக்க ஆரம்பித்தான்.
"இன்னொரு அண்ணன் எங்கண்னே"
"சுசியா டா, நாளைக்கு ஊருக்கு போறதுக்கான விஷயமா வெளிய போயிருக்கான்டா, நேரா பஸ் ஸ்டாண்டு வந்திருவான்"
"ஐயோ நா அவருக்கும் சேத்து சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேனே"
"அப்படியா, பரவாயில்ல அத நீயே சாப்பிடு.. வா"
"ஐயோ வேணாம்னே, லேட்டாயிடும்"
"டேய் சாப்டுடா"

"அவனுங்க நாளைக்கு காலைல ரூம்ம காலி பண்ணிட்டு ஊருக்கு போறாங்களாம் டா, பழைய பாக்கிலாம் சேத்து இன்னிக்கு செட்டில் பண்ணிடராங்கலாம்.. இன்னிக்கு விட்ட அப்பறம் காசு வராது டா.. கடை நெலம தான் உனக்கு தெரியும்ல.. எனக்காக போய் சாப்பாட்ட குடுத்துட்டு காச வாங்கிட்டு வா டா ", பாவமாக.
"சரி போறேன்! இதான் கடைசி! சரியா?" என்றபடியே சைக்கிளில் சாப்பாட்டு கூடையை மாட்டிக்கொண்டு கிளம்பினான் வசந்த்.
வசந்த் அந்த பாய் கடையில் தான் ஐந்தாறு வருடமாய் வேலை செய்து கொண்டிருக்கிறான். 23 வயது, வெள்ளை நிறம், 5 '9 உயரம். இந்திப்பட ஹீரோ போலவே இருப்பான். பார்த்தால் சத்தியமாக ஹோட்டலில் வேலை செய்பவன் போல தோன்றாது. அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கொஞ்சம் பயந்த சுபாவம். 'முனி' 'காஞ்சனா' லாரன்ஸ் போல 'இருட்டு' தான் இவனுக்கும் எதிரி. கரண்ட் போனாலே நடுநடுங்கி விடுவான். இப்போதெல்லாம் நாளைக்கு நிறைய நடுங்குகிறான். அவர்கள் வீடு வந்தது. நான்கு பேர் தங்கியிருக்கிறார்கள்.சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு மேலே சென்றான்.
"டக் டக்"
"டக் டக் " இரண்டு முறை கதவை தட்டியதற்க்கு எந்தப் பதிலும் இல்லை.
"அண்ணே, நான் தான் பாய் கடைப்பையன். கதவ தொறங்...." சொல்லி முடிக்கும் முன் கதவு திறக்கப்பட்டது.
"வாடா தம்பி"
"இந்தாங்க அரவிந்தண்ணே சாப்பாடு, காசக்குடுத்திங்கன்ன கெளம்பிடுவேன்"
"ஏண்டா பறக்குற"
"இல்லன எனக்குதான் இருட்டுன்னா பயம்னு உங்களுக்கு தெரியுமே.. கரண்ட் கிரன்ட்போயிட போகுதுணா"
"தம்பரி, நீ பேப்பரெல்லாம் படிக்கமாட்டியா? இன்னிலேந்து ரெண்டு மணிநேரம் தான் கரென்ட் போகும். அது மதியானமே போயிடுச்சு.. நீ வா"
உள்ளே நுழைந்து சாப்பாட்டை பிரிக்க ஆரம்பித்தான்.
"இன்னொரு அண்ணன் எங்கண்னே"
"சுசியா டா, நாளைக்கு ஊருக்கு போறதுக்கான விஷயமா வெளிய போயிருக்கான்டா, நேரா பஸ் ஸ்டாண்டு வந்திருவான்"
"ஐயோ நா அவருக்கும் சேத்து சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேனே"
"அப்படியா, பரவாயில்ல அத நீயே சாப்பிடு.. வா"
"ஐயோ வேணாம்னே, லேட்டாயிடும்"
"டேய் சாப்டுடா"
அந்த மிரட்டலுக்கு பயந்து ஒப்புக்கொண்டான். நான்கு பேரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். கரண்ட் போய்விடகூடாது என்று வேண்டிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான் வசந்த். பாதி சாப்பிட்டு முடிப்பதற்குள் வசந்த் பயந்தமாதிரியே கரண்ட் போனது.
"நா அதான் அப்பயே சொன்னேன்ல என்னே இப்டி பண்றீங்க?" என்றான் வசந்த் அழும் குரலில்.
"டேய் நானாடா கரன்ட்ட புடுங்குனேன்? என்கிட்ட கோவிச்சிக்குற? இரு டா அரை மணி நேரத்துல வந்துரும்"
ஒன்னரை மணிநேரம் ஆகிவிட்டது, கரண்ட் வருவதற்க்கான அறிகுறியே இல்லை. வசந்த் அழவே ஆரம்பித்துவிட்டான்.
"டேய் ஏன்டா அழுவுற? இப்போ என்ன ஆச்சு?"
"இனிமே நா எப்டி கடைக்கு போவேன்? மணி 11 க்கு மேல ஆச்சு.. பாய் வேற கடைய பூ..ட்..டி..ரு..ப்பாரு"
"சேரி அழுவாத, நைட்டு இங்க தூங்கு.. காலைல 4 மணிக்கு கெளம்புவோம், நாங்களே கொண்டுபோய் கடைல விடறோம்"
"சரிண்ணே" என்று வேறு வழியில்லாமல் அங்கேயே படுத்துக்கொண்டு அவர்களுடன் தூங்கினான்.
சரியாக அதிகாலை நாலு மணிக்கு எல்லோரும் கிளம்பினார்கள் பிணமாக.
அன்றைய அனைத்து செய்தித்தாள்களிலும் இதுதான் தலைப்புச்செய்தி....
"பல வங்கிக்கொள்ளையில் ஈடுப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் அரவிந்த் மற்றும் அவனது கூட்டாளிகள் 2 கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒரு ஹோட்டல் ஊழியன் உட்பட நான்கு பேர் போலிசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்".

ம்.ம்... கடைசி லைன் படிக்கிற வரைக்கும் நான் யூகிக்கல! நடந்த நிகழ்ச்சி இப்படியும் இருக்குமோன்னு யோசிக்க வைக்குது. நல்ல எழுத்து ! பிழைகளும் தென்படவில்லை....வாழ்த்துகள் :-)
ReplyDeleteநன்றி சார் :))
Deleteகுட் ட்விஸ்ட்
ReplyDeleteநன்றி மாம்ஸ்:))
Deleteஎதிர்பார்க்காத முடிவு...அப்டியே போலிஸ் கமிஷனருக்கு இந்த கதைய மெயில் பண்ணுங்க
ReplyDeleteசரிங்க பண்ணிடலாம்:))
Deleteஇதைப் பார்த்தாவது அம்மா சரியா கரண்ட் கொடுக்கலாம்.. இவங்களே நல்ல வழிய குடுத்தது போல.. அமைச்சு கொடுத்துட்டாங்க:-(
ReplyDeleteம்ம்ம்...! சின்ன கற்பனை தான்..
Deleteக்ளாஸ்... நிஜமாவே ஒரு நல்ல விஷயத்தை எடுத்து சொல்லியிருக்கீங்க. எழுத்தை தொடருங்கள்!
ReplyDeleteநன்றி அர்ஜுன் அண்ணா! கண்டிப்பா உங்கள் ஆதரவிருந்தால்!!
Deleteகடைசி ட்விஸ்ட் சூப்பர்.... அருமையா இருக்கு...இது போன்று தொடர்ந்து எழுதுங்கள்.....வாழ்த்துக்கள்.... by @rdhakshina
ReplyDeleteநன்றி தட்சிணா:))
Deleteசிந்திக்க வேண்டிய ஒரு விஷயத்தை நல்ல கற்பனையுடன் எழுதியுள்ளிர்கள்.எழுதுபுப்பணி தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி கீர்த்தனா:))
Delete